Description
உட்பொருட்கள் :-
சாம்பிராணி, கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், பேய் மிரட்டி, கற்றாழை, நிலவேம்பு , வேம்பு, வெள்ளெருக்கு, ஆல & அரச இலை, எலுமிச்சை தோல், நாயுருவி, கீழா நெல்லி, குப்பை மேனி, தேங்காய் நார், தும்பை, வெட்டிவேர்
பயன்படுத்தும் முறை :-
80 கிராம் பாக்கெட்டை நான்கு பங்காக பிரித்துக்கொண்டால் எவ்வளவு வருமோ அதுதான் ஒருமுறை பயன்படுத்தும் அளவு. பொடி மற்றும் மூலிகை துகள்களாக உள்ளதால் எடையாக பிரித்துக்கூறவில்லை. எடை என்றால் 20 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும். சாம்பிராணி ஏந்தல் விளக்கு அல்லது ஏதேனும் ஒரு மண் / சில்வர் குவளையில் மூலிகை சாம்பிராணியைப் போட்டு தீக்குச்சியால் பற்ற வைக்கவும்.
ஊதுபத்தியை பற்றவைத்ததும் எவ்வாறு எரிகிறதோ அதுபோல எரியும். கொஞ்சம் நெருப்பாகும்வரை எரியவிடவும். நெருப்பு தானாக அணையவில்லை என்றால் கையைவைத்து காற்றுபட வீசினால் அணைந்துவிடும். பின் தானாக புகைந்துகொண்டு இருக்கும். விரைவாக புகைவரவேண்டும் என்று நினைத்தால் காற்றாடியின் கீழ் வைக்கவும் புகை நன்றாக வீடுமுழுக்க பரவும்வரை கதவுகளை சாத்திடவும். 100 உங்கள் குடும்பத்தை சுவாச பிரச்சனைகள் இல்லாமல் பாதுகாக்கும். உங்களுக்கு தேவைப்பட்டால் காய்ந்த மிளகாய் உடைத்து பத்து விதையை சாம்பிராணி நெருப்பில் போடவும். கூடுதல் பாதுகாப்பானது. நெடியேறும் என்பதால் நாங்கள் தவிர்த்துள்ளோம்.
வாழ்க வளமுடன் !
There are no reviews yet.