Description
Divine Life Booster | 500 Ml
பயன்படுத்தும் முறை :
காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி சிரப் உடன் 150 மில்லி சூடான நீர் கலந்து தேநீர் குடிப்பதுபோல கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கவும். குடித்து முடித்தபின் 1 மணி நேரத்திற்கு காப்பி, தேநீர், பிற உணவுகள் எதுவும் எடுக்காமல் தவிர்க்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் மட்டும் அளவாக அருந்தவும். பிராய்லர் வகை இறைச்சி உணவு கூடாது. மீன் , ஆட்டு இறைச்சி, நாட்டுக்கோழி வாரம் ஒருநாள் சிறந்தது. மது மற்றும் புகையிலையை பயன்படுத்த கூடாது. உணவில் அதிகப்படியான காரம், மற்றும் புளிப்பை குறைத்துக்கொள்ளவும்.
கருவாடு கூடாது. முறையாக உணவுகளை கடைபிடித்தால் 100% மருத்துவம் உடலையும் , உயிரையும் சேரும். இல்லையேல் மருந்து பயனளிக்காது. மருத்துவம் பயனுள்ளபடி உணவுகளை எடுத்து பல்லாண்டு எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல ஈசன் அருளட்டும்.
மருத்துவ பயன்கள் :
1. கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும்.
2. மூலநோயை குணமாக்கும்
விந்தணுகளின் எண்ணிக்கையை அதிகரித்து ஆண்மையை அதிகரிக்கும்.
4. சிறு நீரகம் சம்பந்தமான நோய்களை நீக்கும்.
5. மஞ்சள் காமாலை நோயை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது.
6. பசியை தூண்டும். மேலும் ரத்தத்தை சுத்திகரிக்கும்.
7. உஷ்ணத்தால் ஏற்படும் வாந்தியை குணமாக்கும்.
8. கல்லீரலைப் பாதுகாக்கும் மற்றும் கிருமிகளைக் கொல்லும் சக்தி கொண்டது.
9. எல்லா வகையான காய்ச்சல்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டது.
10. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி ஞாபகத் திறனை அதிகரிக்கும்
11. வாழ்நாள் அதிகரிக்கும்.
சித்தர் பாடல் :
கந்த நாறுகரந்தையதின் குணம்
மந்த வாதங்கரப்பனை மாற்றிடுத்
தொந்த ரோகந் துடைக்கு மிருமலர
மந்த நோயுந் தணிக்கும் மனணையே
-தேரையர்
இம்மூலிகை சாறினை 9 மாதங்கள் தொடர்ந்து எடுப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை சித்தர் பெருமக்கள் எடுத்துரைத்திருப்பதை அறிவோம்.
” முதல் மாதம் உடல் நாற்றம் நீங்கும்,
இரண்டாம் மாதம் வாத நோய்கள் நீங்கும்,
மூன்றாம் மாதம் பித்த நோய்கள் நீங்கும் ,
நான்காம் மாதம், தோல் நோய்கள் நீங்கும்,
ஐந்தாம் மாதம் பசி கூடும் ,
ஆறாம் மாதம், அறிவு தெளிவு உண்டாகும் ,
ஏழாம் மாதம் உடல் வனப்பு உண்டாகும்,
எட்டாம் மாதம் உடல் தோல் உரியும்,
ஒன்பதாம் மாதம், நரை, திரை, பிணி நீங்கும்”
யோகம் சித்தியாகும் என்று சித்தர் காய கற்பம் விளக்குகிறது என்று சித்த ரகசியம் என்ற நூல் தெளிவுபடுத்தியுள்ளது.
There are no reviews yet.