Description
” பெண்மை புரட்சி ” போல காட்டிக்கொண்டு நடக்கும் அநியாயத்தை பெண்களாகிய நீங்களும், பெண்களை பெற்ற தகப்பனார்களும் , சகோதரிகளுடன் பிறந்த அண்ணன் தம்பிகளும் புரிந்துகொள்ள வேண்டும். – கஞ்சமலையார்
ஒரு பெண் பருவம் அடைந்த நாளிலிருந்து உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாக அவர்களது உடல் அசௌகாரியங்கள் பெரும் பங்குவகிக்கினறன.
அதில் குறிப்பாக மாதம் மாதம் ஏற்படும் மாதவிலக்கு இன்று பெரும் கொடுமைக்காலமாக மாறி வருவது ஏற்புடையது அல்ல. பெண்ணாக பிறந்த நம் ஆத்தா , அப்பாத்தா காலத்தில் மாதவிலக்கு என்பது இல்லாமல் இல்லை. அவர்கள் இப்படியான கஷ்டங்களை அனுபவிக்கவில்லை.
கூலிக்கு வேலை பார்க்க ஆண்கள் மட்டும் பத்தாத முதலாளி வர்க்கம் அவர்களுக்காக செய்துகொண்ட புரட்சிதான் ” பெண்ணுரிமை புரட்சி ”
முன்பெல்லாம் வயலில் வேலைபார்ப்பதைக் கூட தவிர்த்து மாதவிலக்கு காலங்களும் முழுநேர ஓய்வு கொடுத்து வீட்டில் இருக்க வைத்தார்கள்.
இன்று ரத்தம் எவ்வளவு வந்தாலும் அதை உறிஞ்சிக்கொள்ள நாப்கின் உள்ளதாக விளம்பரங்கள் செய்து வியாபாரமும் செய்து ஓய்வு இல்லாமல் கூலிவேலைக்கு வந்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் போக்கு பலருக்கும் புரட்சியாக பதிய வைக்கப்பட்டுள்ளது.
மாதவிலக்கு மூன்று நாட்கள் என்ற கணக்கு போய்
1) 5 முதல் 10 நாட்கள் அதிக ரத்தம் வரும்
2) 1 மாதம் நிற்கவே இல்லை
3) 6 மாதங்களாக வரவே இல்லை
4) மாத்திரை போட்டால்தான் வரும்
5) மாத்திரை போட்டால்தான் நிற்கும்
5) வலி மாத்திரை போட்டுக்கொண்டுதான் வேலைக்கே போகமுடியும்
6) குழந்தை இல்லை
7) நீர்க்கட்டி உள்ளதாம்
8) சினைக்காட்டி உள்ளதாம்
9) கருமுட்டை வளர்ச்சி இல்லையாம்
10) கரு முட்டையே இல்லையாம்
11) கருப்பை குழாய் அடைத்துள்ளதாம்
12) கருப்பையில் புற்றுநோயாம்
13) செயற்கை கருத்தரிப்பு
14) கருமுட்டை வியாபாரம்
15) வாடகைத்தாய்
அப்பறோம் லீசுக்கு கொடுப்பாங்க, கிரயத்துக்கு வாங்குவாங்க இதெல்லாம் வாழ்க்கை?
இதில் பாரதமாதா என்று இந்தியாவிற்கு ஒரு பெண்ணை நிறுத்தி வணங்குகிறோம். ஆறுகளுக்கு , நதிகளுக்கு பெண்களின் பெயர் சூட்டி கொண்டாடுகிறோம். பெண் கல்வி , பெண் தெய்வம் , பராசக்தி , பெண் பாவம் பொல்லாதது என பெண்களை கொண்டாடுவது போலவும், பெண்கள் பெருமைக்கு உரியவள் என்ற மாயையை உருவாக்கி அந்த மாயையை ” பெண்மை புரட்சி ” போல காட்டிக்கொண்டு நடக்கும் அநியாயத்தை பெண்களாகிய நீங்களும், பெண்களை பெற்ற தகப்பனார்களும் , சகோதரிகளுடன் பிறந்த அண்ணன் தம்பிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.
இதுகுறித்து பேசி தீர்க்க வேண்டியவை ஏராளம் உண்டு. அதன் தொடக்கமாக நம் பிள்ளைகளுக்கு பெண்மையை வலியில்லாமல் திருப்பி கொடுக்கலாமா ? இயற்கை அளித்துள்ள தாவரத்தை இயற்கையுடன் கலந்த நம் சித்தர்கள் கொடுத்த அற்புதங்களைக் கொண்டு நம் சகோதரிகளை காப்போம்.
உட்பொருட்கள் :
நிலக்கடம்பு, சிறுபூனைக்காலி , கல்யாண முருங்கை, இலந்தை , நாட்டு சர்க்கரை, பசு நெய், சுக்கு, மல்லி, மிளகு
பயன்கள் :
- மாதவிடாய் கோளாறுகள் எதுவாயினும் சிறந்த பலன் கொடுக்கும்.
- குழந்தையின்மை பிரச்சனை ஏற்பட அடிப்படை காரணங்களை களையும்.
- பூப்பெய்த பெண்கள் யாவரும் பயன்படுத்திடுவது ” வரும்முன் காப்போம் ” என்ற நோயற்ற வாழ்வுக்கு வழியமைக்கும்.
- கர்ப்பப்பை வலிமை பெரும்
- கருமுட்டைகள் வளர்ச்சி & வலிமையாகும்.
- எடை பராமரிக்க உதவும்
- அடிவயிறு பெருக்கம் குறைக்கும்
சுதந்திரமாக செல்லுங்கள் ( Go Free ) லேகியம்
500 கிராம் ரூ.350/- மட்டுமே
தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் கட்டணம் இல்லை.
இந்தியா முழுவதும் குறைந்த கட்டணத்தில் அனுப்பப்படும்.
There are no reviews yet.