Description
மூலப்பொருட்கள் :-
வேம்பு, நொச்சி, ஆரஸ்பதி, தும்பை, ஆலமரம் இலை, அரசமரம் இலை, புதினா, நாயுருவி, கஸ்தூரி மஞ்சள், குப்பைமேனி, மூக்கிரட்டை, ஆவாரம் இலை, புளிய இலை, நுணா இலை, சித்தரத்தை
பயன்படுத்தும் முறை :-
*6 லிட்டர் தண்ணீரில் இரண்டு கைப்பிடி மூலிகையை கலந்துகொள்ளவும். சுமார் 15 முதல் 20 நிமிடம் சூடேற்றவும். பாத்திரம் மூடி இருக்கவேண்டும். அதிகமாக ஆவி வெளியேறாமல் பார்த்துக்கொள்ளவும்.
*பின் அடுப்பிலிருந்து இறக்கி கீழேவைத்து சூடும் ஆவியும் பாத்திரத்திலிருந்து வெளியேறுவதை உங்கள் உடல் ஏற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
*காற்று வெளியேறாத அளவிற்கு போர்வைகொண்டு உங்களையும் மூலிகை தண்ணீர் உள்ள பாத்திரத்தையும் மூடிக்கொள்ள வேண்டும்.
சற்று சூடாக உடம்பில் பட்டு குளித்ததுபோல வியர்வை வெளியேறும். ஒரு கரண்டியை கையில் வைத்துக்கொண்டு நீரை கலக்கிவிடவேண்டும்.
*அதிக ஆவி சூட்டுடன் உங்கள் முகத்தில் படும். நன்றாக சுவாசிக்கவும். உங்கள் உடலில் உள்ள கெட்டவை எல்லாம் வியர்வையாய் வெளியேறிவிடும். 10 நிமிடங்கள் இவ்வாறு செய்யவும். பின் வியர்வையை துணியால் துடைத்துவிடவும். துணியை பிறர் பயன்படுத்தாமல் துவைக்க போட்டுவிடவும். அந்த நீரை கீழே ஊற்றாமல் குளிக்க பயன்படுத்தவும்.
பயன்கள் :
1. சுவாச பிரச்சைகள் அகலும்
2. நுரையீரல் சுத்தமாகும்
3. இதயம் வலிமைபெறும்
4. தலைவலி , உடல்வலி நீங்கும்
5. சளித்தொல்லை நீங்கும்
6. மிகுந்த புத்துணர்ச்சி அடைவீர்கள்

Neem - Dishwash Gel | Eco-friendly | Baby Safe | Pet Friendly Dish Cleaning Gel | 100% Natural & Herbal Dishwasher | Kanjagam | Maavel 



There are no reviews yet.